ரஷ்யா- உக்ரைன் போரை முடிக்க உதவ இந்தியா தயார்; ஜெய்சங்கர்

கீவ்: ரஷ்யா – உக்ரைன் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

ரஷயா – உக்ரைன் இடையே நீண்ட ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. அமெரிக்கா முயற்சி செய்த போதும் இந்த மோதல் முடிவுக்கு வரவில்லை. பேச்சுவார்த்தை வாயிலாக பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. இந்த மோதலில் கருங்கடல் பகுதியில் இந்திய கடல் மாலுமிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உக்ரைன் மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளார். இன்று அவர் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆன்ட்ரில் சிபிஹாசவை சந்தித்தார்.

கீவ் நகரில் ஜெய்சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: உக்ரைன் – ரஷ்யா இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியா எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்றால் அதனை செய்யத் தயாராக இருக்கிறோம். கருங்கடல் பகுதியில் வணிக கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து விவாதித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

Source link