ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிபிஐ வீரபாண்டியன்: நேரில் நலம் விசாரித்த புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா – ministers n anand and aadhav arjuna inquired about the health condition of cpi veerapandian

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயளாலர் வீரபாண்டியன் தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் நலமுடன் இருப்பதாக சிபிஐ கட்சி அறிவிட்டுள்ளடு. இதனிடையில் அவருடைய உடல் நலம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சிபிஐ வீரபாண்டியனை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் டெல்லிக்கு சென்றிருந்த நிலையில், அவருக்கு தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவரின் உடல்நிலை குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியனை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்துள்ளனர். இதனையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை அமைச்சர்கள் சந்தித்துள்ளது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்று கொண்டிருக்கின்றன.

Source link