“ரியாலிட்டி ஷோ எவ்வாறு இருக்கும் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறேன்! – நடிகர் பரத் |”I am curious to know what a reality show would be like!” – Actor Bharath

ஆனால் அந்த சினிமா எப்படி உருவாகிறது, அதன் பின்னணியில் எவ்வளவு உழைப்பு இருக்கிறது, எத்தனை பேர் பணிபுரிகிறார்கள் என்பதைக் காட்டும் முயற்சிதான் இந்த நிகழ்ச்சி. அந்த ‘மேக்கிங்’ செயல்முறையைப் பார்ப்பதன் மூலம் சினிமாவின் உண்மையான சுவாரஸ்யத்தை மக்கள் உணர முடியும்.

அதுவே இந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டிய முக்கிய காரணம். நிச்சயமாக நல்ல வரவேற்பு கிடைக்கும். ‘பிக் பாஸ்’ போன்ற நிகழ்ச்சிகளுக்குக் கிடைத்த வரவேற்பைப் போலவே இதற்கும் கிடைக்கும்.

முக்கியமாக, சினிமா அனைவருக்கும் பிடித்த ஒன்று என்பதால், சினிமாவில் ஆர்வமுள்ளவர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் இது சமமாகப் பிடிக்கும். இது ஒரு புதுமையான முயற்சி.

சினிமாவில் பல விஷயங்களைச் செய்து பார்த்த பிறகு, இந்த மாதிரியான ஒரு ரியாலிட்டி ஷோ எவ்வாறு இருக்கும் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறேன். இது கண்டிப்பாகப் பேன் இந்தியா அளவில் வெற்றி பெறும்.

சினிமா உருவாகும் பின்னணியை மக்களுக்கு நேரடியாகக் காட்டுவது இதன் முக்கிய நோக்கம்” என்றார்.

Big Pitchure Launch Event

Big Pitchure Launch Event

நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் தேவா, “நாம் பல நேரங்களில் கடின உழைப்பில் உருவாகும் திரைப்படங்களை எளிதாக விமர்சித்துவிடுகிறோம். அந்த அனுபவத்தை உணர வைக்கும் ஒரு முயற்சிதான் இது.

இந்த நிகழ்ச்சிக்கான பாடலை உருவாக்கும்போது பல முயற்சிகள் செய்தோம். இறுதியில் இன்றைய தலைமுறைக்கு ஏற்ற பாடல் உருவாக்கப்பட்டது. பாடலாசிரியர் பா. விஜய் எழுதிய இந்தப் பாடலை ஆதித்யா, மோனிஷா மற்றும் R.A.V இணைந்து பாடியுள்ளனர்” என்றார்.

Source link