அரக்கோணம்: அரக்கோணத்தில், 2,000 ரூபாய் லஞ்சம் பெற்ற மின்வாரிய வணிக ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, 48, என்பவர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், கீழ்குப்பத்தை சேர்ந்தவர் யுவராஜ், 30. தெருக்கூத்து கலைஞர். குடிசை வீட்டில் வசித்தவர், தற்போது புதிதாக மாடி வீடு கட்டியுள்ளார்.
இந்நிலையில், குடிசை வீட்டில் இருந்த மின் மீட்டரை, புதிய வீட்டிற்கு மாற்றி பொருத்த கோரி, அரக்கோணம் விண்டர் பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்தார். அதற்கு, வணிக ஆய்வாளர் சுந்தரமூர்த்தி என்பவர், 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். கொடுக்க விரும்பாத யுவராஜ், ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் அறிவுரைப்படி யுவராஜ் பணம் வழங்கியபோது பெற்றுக்கொண்ட சுந்தரமூர்த்தி, கைது செய்யப்பட்டார்.
