நமது நிருபர்
மின் இணைப்பு வழங்க, 7,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, உதவி மின் பொறியாளர் சந்திரன் என்பவர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு தாம்பரம், கஸ்துாரி பாய் நகரைச் சேர்ந்தவர் சிவசெல்வன், 47. தன் தந்தை ஜெயராமன் பெயரில் உள்ள வீட்டுக்கு, கூடுதல் ஒற்றை மின் இணைப்பு கேட்டு, ஜூலை 9ம் தேதி விண்ணப்பித்தார். கட்டணம் செலுத்திய பின், ஆக., 6ல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதற்கு உதவி பொறியாளர் சந்திரன் என்பவர், 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பின், 7,000 ரூபாயாக குறைத்து கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவசெல்வன், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, சிவசெல்வனிடம் 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சந்திரனை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
