-நமது நிருபர்-
நாகை மாவட்டம், ஆவராணியை சேர்ந்தவர் ரேணுகா, 34. இவரது கணவர் ஆனந்தன் சமீபத்தில் இறந்தார். இந்நிலையில், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிவாரண தொகை பெறுவதற்காக, ஆவராணி வி.ஏ.ஓ., அலுவலகத்தில், ரேணுகா சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார்.
சான்றிதழ் அளிக்க வி.ஏ.ஓ., செல்வம், 7,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத ரேணுகா, நாகை, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார், அறிவுறுத்தல்படி ரேணுகா, வி.ஏ. ஓ.,விடம் பணத்தை கொடுக்கும் போது, இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், வி.ஏ.ஓ., செல்வத்தை கைது செய்தனர்.
