10,000 பெண்களுக்கு 8 லிட்டர் பால் தரும் விலையில்லா கறவை மாடுகள்; ரூ.57 நிதி ஒதுக்கியது தமிழக அரசு

தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு;

நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர், 2026-27ம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், தமிழகம் பால் உற்பத்தியிலும், பால் கொள்முதல் செய்வதிலும் தேசிய அளவில் முன்னிலையில் உள்ளது.

பால் உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும், ஊரகப்பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் ஆண்டுதோறும் 10,000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். அதை செயல்படுத்தும் பொருட்டு, 2026-27ம் நிதயாண்டிற்கு 57 கோடி ரூபாய்க்கான நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பயனாளிக்கு குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு 8 லிட்டர் பால்கறக்கும் திறனுள்ள ஆரோக்கியமான, அதிக பால் தரும் கலப்பின கறவை மாடு ஒன்று வழங்கப்படும்.

இவ்வாறு தமிழக அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link