ரெட் அலர்ட்!. டெல்லி விமான நிலையத்தை மூழ்கடித்த மழைநீர்!. ஸ்தம்பித்த சேவை; பயணிகள் அவதி!. வைரலாகும் வீடியோ! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

தலைநகர் டெல்லியில் பெய்த கனமழை காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவில் தண்ணீர் தேங்கியது. இதனால் மும்பை, அகமதாபாத் மற்றும் போர்ட் பிளேர் ஆகிய நகரங்களில் இருந்து டெல்லி வந்தடைய வேண்டிய பல உள்நாட்டு விமானங்கள் கடுமையாக தாமதமாகின.

விமான நிலையத்தின் வருகை பகுதி மற்றும் முனையங்களில் தண்ணீர் முழங்கால் அளவிற்கு தேங்கியதால், பயணிகள் தங்கள் உடமைகளை சுமந்து கொண்டு தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட பயணி மான்சி கூறுகையில், நான் இதுவரை இப்படி ஒரு சூழ்நிலையைப் பார்த்ததே இல்லை; எங்கு பார்த்தாலும் தண்ணீராக இருக்கிறது. வருகை பகுதிக்கு செல்ல முடியாமல் அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கிறேன் என்றார்.

#WATCH | Delhi: Heavy rainfall in the national capital region affects several flights arriving in Delhi, causing delays to domestic flights, including those coming from Ahmedabad, Mumbai, and Port Blair.

(Visuals from IGI Airport) pic.twitter.com/e6zVKlmJKT

— ANI (@ANI) September 4, 2026

இதையடுத்து விமான நிலைய நிர்வாகம் கூடுதல் ஊழியர்களைப் பணியமர்த்தி, தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மேலும், கார்மேகங்கள் சூழ்ந்து திடீரென பெய்த கனமழையால், ஜன்மாஷ்டமி கொண்டாட்டத்திற்காக வெளியே வந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும், இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Post

Sat Sep 5 , 2026

40 வயதைக் கடந்த பெண்களுக்கு உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழியாக மட்டும் இல்லாமல், வயதுக்கு ஏற்ப உடலில் ஏற்படும் மாற்றங்களை சமாளிக்க உதவும் முக்கியமான பழக்கமாகவும் மாறுகிறது. வேலை, குழந்தைகள், குடும்பப் பொறுப்புகள் என பரபரப்பாக இயங்கும் பெண்களுக்கு நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வது சிரமமாக இருந்தாலும், தினசரி வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் குறுகிய நேரத்தை ஒதுக்குவது பல்வேறு நன்மைகளை அளிக்கும். 40 வயதுக்குப் பிறகு […]

walking

Source link