ரேவதிக்கு துப்பாக்கி சூடு; பரதநாட்டிய போட்டியில் காத்திருந்த அதிர்ச்சி: கார்த்திகை தீபம் அப்டேட்

ரேவதிக்கு துப்பாக்கி சூடு.. பரதநாட்டிய போட்டியில் காத்திருந்த அதிர்ச்சி – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி மற்றும் சுபலட்சுமி இடையே பரதநாட்டிய போட்டி தொடங்கிய நிலையில் இன்று இருவரும் இடைவிடாமல் பரதநாட்டியம் ஆடிக்கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் சுப்புலட்சுமி தன்னால் முடியவில்லை என நாட்டியத்தை நிறுத்தி தனது தோல்வியை ஒப்புக்கொள்கிறாள். 

மேலும் ரேவதியை கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்லி அங்கிருந்து விடைபெறுகிறார். அடுத்ததாக சிவணான்டி ஏற்பாடு செய்த ஆள் ரேவதி நோக்கி துப்பாக்கி சூடு நடத்த நெற்றிக்கு வைத்த குறி தவறி கையில் படுகிறது. ரேவதி துப்பாக்கியால் சுடப்பட்டதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். 
பிறகு ரேவதியை ஹாஸ்பிடலில் அனுமதிக்க இங்கே சிவனாண்டி மற்றும் சந்திரகலா இந்த பழியை சாமுண்டீஸ்வரி மீது போட்டு விட முடிவெடுக்கின்றனர்.

ரேவதிக்கு ட்ரீட்மென்ட் நடந்தது எதுக்காக பாதிப்பு இல்லை என டாக்டர் சொல்ல அனைவரும் பெருமூச்சு விடுகின்றனர். எல்லோரும் இதற்கு காரணம் சாமுண்டீஸ்வரி தான் என நினைத்துக் கொண்டிருக்கிற கார்த்திக் நிச்சயமா அத்தை இத பண்ணியிருக்க மாட்டாங்க என உறுதியாக சொல்கிறான். 

அதன் பிறகு ரேவதி பரதநாட்டியம் எப்படி இருந்தது என்று கேட்க கார்த்திக் அதெல்லாம் நல்லாத்தான் இருந்தது. ஆனா இப்போ உன்னுடைய உடல்நிலை தான் முக்கியம் என ஆறுதல் சொல்கிறான். மறுபக்கம் சிவனாண்டி ரவுடியை சந்தித்து பணத்தை கொடுத்து கண் காணாத இடத்திற்கு போக சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

வாசுதேவன் வைத்த செக்மேட்.. வழியில்லாமல் இறங்கி வந்த அப்பத்தா – வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்

சூடவா சீரியலில் நேற்றைய எபிசோடில் பாண்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற நிலையில் இன்று தேவி ஒப்பாரி வைத்து எப்படியாவது என் புருஷனை காப்பாத்துங்க என அப்பத்தாவிடம் கெஞ்சுகிறாள். இங்கே வாசுதேவன் போலீசுக்கு போன் போட்டு என்னயா ஆச்சு என்று கேட்க பாண்டியை அழைத்து வந்து உட்கார வைத்திருக்கும் விஷயத்தை சொல்கிறார்கள். 

பிறகு அப்பத்தா வாசுதேவனுக்கு போன் போட வாசுதேவன் பணத்தை வாங்கிட்டு நான் சொல்றத செய்யல அதனால எனக்கு வேற வழியே தெரியல என்று சொல்ல அப்பத்தா வேறு வழி இல்லாமல் நேரடியாக சென்று ஜீவா மீனாட்சியை அழைத்து வர முடிவெடுக்கிறார். அதைத் தொடர்ந்து அப்பத்தா இந்த குடும்பத்துக்காக இறங்கி போய் இரண்டு மருமகளையும் நானே கூட்டிட்டு வரேன் என்று கிளம்புகிறார். 

மறுபக்கம் ஜீவா கோபப்படக்கூடாது என்பதற்காக மீனாட்சி உன்ன ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன் என்று சொல்லி தியானம் செய்யும் மண்டபத்திற்கு அழைத்து வருகிறாள். மீதம் போனை சுவிட்ச் ஆப் செய்து ஜீவாவை தியானம் செய்ய வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

மருதுவை எச்சரித்த சித்தர்.. சாமந்திக்காக ரிஸ்க் எடுத்த அர்ஜுன் – சாமந்தி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

சம்மந்தி சீரியலில் நேற்றைய எபிசோடில் மருது சாமந்திக்கு போன் செய்து இராமேஸ்வரத்துக்கு வர சொன்ன நிலையில் இன்று சாமந்தி அர்ஜுனுக்கு காபி போட்டு கொடுக்க அர்ஜுன் எனக்கு நீ இதெல்லாம் பண்ண மாட்டியே என்ன புதுசா இருக்கு என்று கேட்கிறான். டிரைவர் தம்பி டிரைவர் தம்பி நானும் ராமேஸ்வரம் வரேன் எனக்கு எப்படியாவது உதவி பண்ணு என்று கேட்கிறாள். அர்ஜுன் சரி பார்த்துக்கலாம் என்று சொல்கிறான். 

இந்த சமயத்தில் அங்கு வந்த பார்வதி அதுக்கு வாய்ப்பே இல்லை. சாமந்தியை தவிர வேற யாராவது வரட்டும்னு மேடம் சொல்லிட்டாங்க என்று சொல்ல சாமந்தி வருத்தப்படுகிறாள். ஆனால் அர்ஜுன் ஏதாவது செய்ய வேண்டும் என யோசிக்கிறான். இதையடுத்து கோடீஸ்வரன் அவனது மனைவி ஈஸ்வரியின் ஒன்றாக இருக்கும் சமயத்தில் அங்கு வந்த அர்ஜுன் அம்மா ராமேஸ்வரம் போனதும் சாமந்தியும் அவரது அம்மாவும் இங்கிருந்து எஸ்கே பார்க்க திட்டம் போட்டு இருக்காங்க. சாமந்தி போறது பிரச்சன இல்ல.. போய்ட்டா எங்க இருக்க வேலையெல்லாம் யார் செய்வார் என்று போட்டுவிட இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

வேலை செய்வதற்கு பயந்து உடனே அரசியை சந்தித்து விஷயத்தை சொல்லி சாமந்தியை ராமேஸ்வரம் அழைத்துச் சென்று விடலாம் என சொல்ல அரசியும் யோசிக்கிறாள். பிறகு சாமந்தியை ராமேஸ்வரம் அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறாள். காந்தி வழக்கம் போல ஒரு ஒயர் கூடையில் துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிற அர்ஜுன் ஒரு பையை கொண்டு வந்து அதில் எடுத்து வைக்கிறான். மருதுவிடம் போன் பேசிக்கொண்டே சாமந்தி பொருட்களை எடுத்து வைக்கும் போது நகை பைக்குள் வந்து விடுகிறது.

மறுபக்கம் மருது சித்தரை சந்திக்க வர தூங்கிக் கொண்டிருந்தவர் வா மருது என்று சொல்ல ஆச்சரியமடைகிறார்.பிறகு நீ கண்டிப்பா ராமேஸ்வரம் போகணும் என்று சொல்கிறார். மேலும் மருது இறந்து கரை ஒதுங்குவது போல காட்சி சித்தருகாகு வந்து போக சித்தர் ஒரு ருத்ராட்சத்தை கொடுத்து மருது கழுத்தில் போட சொல்கிறார். எக்காரணத்தை கொண்டும் இதை கழட்டக்கூடாது எனவும் எச்சரிக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Source link