“ரொம்ப எமோஷ்னலாக இருந்தது” – ரசிகர்களுடன் படம் பார்த்த மகிமா நம்பியார்

செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மண்டாடி’. எல்ரெட் குமார் தயாரித்து வழங்கும் இப்படத்தில் வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்திருக்க தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாகவும் சத்​ய​ராஜ், ரவீந்​திரா விஜய், அச்​யுத் குமார் உள்ளிட்டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களிலும் நடித்துள்ளனர். இப்படம் கடலில் நடக்கும் பாய்மரப் படகு போட்டியை மைய்யமாகக் கொண்டு உருவாகியுள்ளது. 

இந்த நிலையில் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சூரியின் ரசிகர்கள் திரையரங்கு வளாகத்தில் பேனர் வைத்தும் பட்டாசு வெடித்து படத்தை வரவேற்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் தாரதப்பட்டை முழங்க புலியாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கொண்டாட்டங்களும் அரங்கேறியது. இதன் நடுவே சூரி அந்த திரையரங்கிற்கு வருகை தந்தார். பின்பு நாயகி மகிமா நம்பியாரும் வருகை தந்தார். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். 

இதையடுத்து படம் பார்த்த பின் நடிகை மஹிமா நம்பியார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “நான் இப்பதான் படத்தை முழுசாக பார்க்கிறேன். அதுவும் ஆடியன்ஸோடு உட்கார்ந்து பார்த்தது சந்தோஷமாக இருந்தது. அவர்களுடைய ரெஸ்பான்ஸ் பயங்கரமாக இருந்தது, தொடர்ந்து அது இருக்கும் என நம்புகிறேன். ஆடியன்ஸ் ஓவ்வொரு முறையும் அந்த கூஸ்பம்ஸ் மொமெண்ட்டுக்காக கைதட்டும் போது ரொம்ப எமோஷ்னலாகவும் சந்தோஷமாகவும் இருந்தது” என்றார். தொடர்ந்து அடுத்த படங்கள் குறித்து பேசிய அவர், “இப்போதைக்கு தமிழில் எதுவும் சைன் பண்ணவில்லை. கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நடித்து வருகிறேன்’ என்றார். 

Source link