லண்டனில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: கீர்த்தனா என்னாச்சு? முதல்வர் விஜய் முதலீட்டு பயணத்தில் குழப்பம் – questions about ministers aadhav arjuna in and keerthana out of cm vijay london investment trip

லண்டன் சுற்றுப்பயணம் சென்றுள்ள முதல்வர் விஜய், தன்னுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை மட்டும் அழைத்து சென்றுள்ளார். இதுதவிர அதிகாரிகளும் சென்றுள்ளனர். ஆனால் தொழில் முதலீடுகள் ஈர்க்கும் திட்டம் எனக் கூறப்படும் நிலையில், அந்த துறை சார்ந்த அமைச்சர் கீர்த்தனா ஏன் செல்லவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய் தவெக ஆட்சி அமைந்த பிறகு முதல்முறை அரசு முறை பயணமாக லண்டன் புறப்பட்டு சென்றுள்ளார். செப்டம்பர் 10ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து துபாய் வழியாக விமானத்தில் லண்டன் புறப்பட்ட நிலையில், வரும் 16ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.

லண்டன் பயணத் திட்டத்தின் நோக்கங்கள்

தமிழகத்தில் செயல்பட்டு வரும் பிரிட்டன் நிறுவனங்கள் உடனான உறவை வலுப்படுத்துவது, ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது, மேம்பட்ட உற்பத்தி, வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள், மின்னணுவியல், உலகளாவிய திறன் மையங்கள் ஆகிய துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்ப்பது, தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் நிலையில், சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட் உள்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு, அதன் சிறந்த நடைமுறைகளை அறிந்து கொள்வது, விளையாட்டு சுற்றுலா, அதனுடன் தொடர்புடைய சிறப்பு வாகனத் தொழில்களில் உள்ள வாய்ப்புகளை அறிந்து கொள்வது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளிநாட்டு பயணம்

இதற்காக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தொழில்துறை வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு அலுவலர்கள் சென்றுள்ளனர். அதிலும் முதலமைச்சர் விஜய் லண்டன் செல்வதற்கு முன்பாகவே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சென்றுவிட்டார்.

அஜித் கார் ரேஸை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்

ஆதவ் அர்ஜுனா சென்ற பின்னணி லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டை முன்மாதிரியாக கொண்டு ஆய்வு செய்வதால் விளையாட்டு துறை அமைச்சராக ஆதவ் அர்ஜுனாவும் உடன் செல்வதை புரிந்து கொள்ள முடிகிறது. அஜித் கார் ரேஸ் தொடக்க விழா இந்த பயணத்தில் மேலும் அங்கு நடைபெறும் லீ மன்ஸ் கோப்பை தொடரை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். இந்த போட்டியில்நடிகர் அஜித்குமார்பங்கேற்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. கீர்த்தனா எங்கே? லண்டன் சுற்றுப்பயணத்தில் தொழில்துறை சார்ந்த முன்னெடுப்புகள் அதிகமாக இருக்கின்றன. அதற்கு துறை அமைச்சராக கீர்த்தனா ஏன் செல்லவில்லை என்ற கேள்வி எழுகிறது.

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஏன் செல்லவில்லை?

ஒருவேளை தாமதமாக புறப்பட்டு செல்கிறாரா? அதுதொடர்பாகவும் எந்தவித தகவலும் அரசிடம் இருந்து வெளிவரவில்லை. இதன் காரணமாக தொழில்துறை சார்ந்த அமைச்சராக கீர்த்தனாவும் உடன் சென்றிருக்க வேண்டுமா? எனக் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இதுபற்றி விசாரிக்கையில் கஸகஸ்தான் நாட்டை சேர்ந்த வர்த்தகத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சென்னையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.

கஸகஸ்தான் நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம் கையெழுத்து

இதில் அந்நாட்டை சேர்ந்த 65 நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றிருப்பது கவனிக்கத்தக்கது. இதன்மூலம் தமிழ்நாடு, கஸகஸ்தான் இடையிலான பொருளாதார வளர்ச்சி மேலும் வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் Guidance Tamil Nadu மற்றும் Invest Kazakhstan இடையில் கையெழுத்திடப்பட்டு வருகிறது. இந்த சந்திப்புகளுக்கு பின்னர் வெளிநாடு செல்ல வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.

Source link