லண்டனில் கார் பந்தயத்தில் பங்கேற்க தீவிர பயிற்சியில் அஜித்; இணையத்தில் வைரலாகும் வீடியோ!

-நமது நிருபர்-

நடிகர் அஜித் குமார் லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் கார் பந்தயத்தில் பங்கேற்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

லண்டனில் நடைபெறும் 2026 மிச்செலின் லீ மான்ஸ் கப் தொடரின் 5-வது சுற்றில், அஜித் குமார் தனது சொந்த ரேசிங் அணியான ‘அஜித் ரெட்ஆண்ட் ரேசிங்’ சார்பாக களமிறங்குகிறார். அஜித், பிரான்ஸ் நாட்டின் ரொமைன் வோஸ்னியாக் உடன் இணைந்து கார் ஓட்டுகிறார்.

அவர் லண்டனில் கார் பந்தயத்தில் பங்கேற்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அஜித் தீவிரமாகப் பயிற்சி எடுக்கும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அஜத் ரசிகர்கள் இணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

மிகுந்த எதிர்பார்ப்பு!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் விஜய் தற்போது லண்டன் சென்றுள்ளார். அங்கு சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தை பார்வையிடும் முதல்வர் விஜய், அஜித் பங்கேற்கும் இந்த கார் பந்தயத்தை இன்று மாலை கொடியசைத்து தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், ”விஜய் முதல்வராக தேர்வானதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி; மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டை ஊக்குவிக்க முதல்வர் விஜய் முயற்சித்து வருகிறார்” என அஜித் பாராட்டியுள்ளார்.

Source link