லண்டனுக்கு அரசு செலவில் முதல்-அமைச்சர் விஜய் உடன் பயணம் செய்தவர்கள்… நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி

நெல்லை

லண்டனுக்கு அரசு செலவில் முதல்-அமைச்சர் விஜய் கூட யாரெல்லாம் சென்றிருக்கிறார்கள் என தெரியாது நெல்லையில் நயினார் நாகேந்திரன் பேட்டியின்போது கூறினார்.

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அவர் பேசும்போது, இன்றைய சூழலில் 2 இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளன. அடுத்து, 4 இடைத்தேர்தல்கள் வரவுள்ளன. சட்டசபை தேர்தல் நடந்து 2, 3 மாதங்களுக்குள் இடைத்தேர்தல்கள் வருகிறது என்றால் அதற்கு காரணம் குதிரை பேரம் நடைபெற்று இருக்கிறது என எல்லோரும் கூறுகிறார்கள்.

குதிரை பேரம்

இந்த குதிரை பேரம் எதற்காக? என்பது உங்களுக்கே தெரியும் என்றார். தொடர்ந்து அவர் பேசும்போது, நம்முடைய முதல்-அமைச்சர் லண்டன் சென்றிருக்கிறார். சொந்த வேலையாக சென்றிருக்கிறாரா… அவருடன் யாரெல்லாமோ சென்றிருக்கிறார்கள் என கூறுகின்றனர்.

ஆனால், அவருடன் யாரெல்லாம் சென்றிருக்கிறார்கள் என்பது தெரியாது. யாரை எல்லாம் கூட்டி சென்றிருக்கிறார் என்பதெல்லாம் தெரியாது. அரசு செலவில் யார் எல்லாம் அழைத்து செல்லப்பட்டனர். உண்மையில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்றிருக்கிறாரா? இல்லையா?

சொந்த வேலை

இந்த 3, 4 நாட்களில் அவர் எத்தனை பேரை சந்திக்க முடியும் என்பது ஒரு கேள்விக்குறி.. அதற்கெல்லாம் லண்டனில் இருந்து திரும்ப வந்த பின்னர் அவர் பதில் கூற வேண்டும்.

சொந்த வேலையாக சென்றிருக்கிறார் என்றால் நாம் எதுவும் கூற முடியாது. ஆனால், முதலீட்டாளர்களை ஈர்க்க சென்றிருக்கிறார் என்றால், யார் யாருடன் சந்திப்பு நடந்தது? எவ்வளவு கோடி முதலீடு வருகிறது? என்ற பதிலை வந்தவுடன் அவர் அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Source link