ரேஸ் இடத்தில் விஜய் : அரசு பணி காரணமாக லண்டன் சென்ற முதல்வர் ஜோசப் விஜய் தன் நண்பர் அஜித் குமார் கலந்து கொண்ட கார் பந்தயத்தை பார்க்க சில்வர்ஸ்டோன் ரேஸ் சர்க்யூட்டுக்கு சென்றார். தன்னை பார்க்க வந்த நண்பனுக்கு தவெக கொடி நிறத்தில் அழகான ரேஸ் சூட்டை பரிசாக கொடுத்து அசத்தினார் அஜித் குமார்.
அந்த ரேஸ் சூட் போட்டு விஜய் ஜாலியாக வலம் வந்த வீடியோவை பார்த்த அவரின் ரசிகர்களுக்கு ஒரே சந்தோஷம் தான். ஒரு மாநிலத்தின் முதல்வராகிவிட்டால் 24 மணிநேரமும் சீரியஸாக இருக்க வேண்டும் என்று இல்லை. இது போன்று குழந்தையாக மாறி சந்தோஷப்படவும் செய்யலாம் என்கிறார்கள்.
த்ரிஷாவும் பார்த்தார்: அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை பார்த்த முதல்வர் விஜய் மட்டும் அல்ல அவருக்கு ராசியான ஹீரோயின் என கொண்டாடப்படும் த்ரிஷா கிருஷ்ணன் கூட வந்திருந்தார். விஜய், த்ரிஷா, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ஒரு இடத்தில் ஒன்றாக இருந்து கார் பந்தயத்தை பார்த்து ரசித்தார்கள்.
மேலும் பந்தயம் நடந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த டென்ட்டுக்குள் அஜித் குமார், விஜய், த்ரிஷா சென்ற வீடியோ வெளியானது. விஜய்க்கு மட்டும் அல்ல அஜித் குமாருக்கும் ராசியான ஹீரோயின் தான் த்ரிஷா. இந்நிலையில் அவர்கள் மூன்று பேரையும் ஒன்றாக பார்க்கவே அழகாக இருந்தது என்கிறார்கள் ரசிகர்கள்.
ஷூட்டிங் வேலை: த்ரிஷா சத்தமில்லாமல் லண்டனுக்கு செல்ல அங்கு அவரை யாரோ வீடியோ எடுத்து வெளியிட்ட பிறகே அவர் சென்னையில் இல்லை என்பது தெரிய வந்தது. லண்டனில் இப்போ என்ன வேலை சவுத் குயின் என ரசிகர்கள் கேட்டு வந்தார்கள். அப்பொழுது தான் பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் முதல் படத்தில் நடிக்க அவர் லண்டனுக்கு சென்றது தெரிய வந்தது.
தல கார் ரேஸ் நடக்கப் போகிறதாம். அப்படியே அதை ஒரு எட்டு பார்த்துவிட்டு வரவும் தலைவி என த்ரிஷாவிடம் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தார்கள். அதே மாதிரி அவரும் அஜித் கார் ரேஸை பார்த்து சந்தோஷப்பட்டிருக்கிறார். இந்நிலையில் கார் பந்தயத்தை பார்க்க வந்த விஜய்யை பார்த்ததும் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துவிட்டார்கள்.
ஐயா ரசிகர்கள்: இத்தனை ஆண்டுகளாக உங்களை தன் ரசிகர்கள் மூலம் மோசமாக பேச வைத்து வேடிக்கை பார்த்தவர் நண்பராகிவிட்டாரா ஐயா?. போதும் ஐயா உங்கள் சகவாசம் என்கிறார்கள் அஜித் குமார் ரசிகர்கள். இந்த சந்திப்பால் #CMVijay, #Ajith ஆகிய ஹேஷ்டேகுகள் தேசிய அளவில் எக்ஸ் தளத்தில் டிரெண்டாகி வருகிறது.
ஐயாவுக்கு இனி நாங்கள் இருக்கிறோம் என விஜய் ரசிகர்களும், போங்கய்யா நீங்களும் உங்களின் நட்பும் என அஜித் குமார் ரசிகர்களும் பேசி வருகிறார்கள். இதற்கிடையேதலைவர், தலைமைப்பண்பு என்றால் என்னவென்றே தெரியாமல் இருப்பது, பிரச்சனை வந்தால் எதிரணி ஆட்கள் மீது பழியை போடுவது, தெறித்து ஓடிவிடுவது எல்லாம் மோச வேலை என பிக் பாஸ் 10 வீட்டில் தலைவி சாதிகாவை பார்த்து தெரிவித்தார் விஜய் சேதுபதி.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
அவர் சாதிகாவை திட்ட மற்றவர்களோ தமிழகத்தில் நடப்பதை தான் பிக் பாஸ் வீட்டு ஜனநாயகத்தோடு ஒப்பிட்டு பேசியிருக்கிறார் மக்கள் செல்வன் என்கிறார்கள். அதை பார்த்த விஜய் ரசிகர்களோ, விஜய் சேதுபதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
Source link
