தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், அர்னாப் புயல் உருவாகவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அர்னாப் புயல் எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் உருவாகவுள்ளது. வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ள நிலையில், இன்று (25-10-26) மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் நாளை (26-10-26) புயலாக வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை மறுநாள் (27-10-26) தீவிரப் புயலாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 28ஆம் தேதி ஆந்திராவின் பாபட்லா – விசாகபப்ட்டினம் இடையே அர்னாப் புயல் கரையை கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அர்னப் புயல் 28ஆம் தேதி முற்பகலில் மிகத் தீவிர புயலாக கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே மதுரை, தேனி, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் விடுக்கப்படுள்ளது. அதே போல் கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, கடலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூ மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
