மும்பை: வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி சார்ந்த நிறுவனங்கள், தங்களது மொபைல் செயலியிலேயே ஆதார் முக அங்கீகார வசதியை நேரடியாக வழங்கும் வகையில் புதிய மென் பொருளை, இந்திய தனித்துவ அடையாள ஆணையமான யுடாய் அறிமுகப்படுத்தி உள்ளது.
மும்பையில் நடைபெற்ற ‘குளோபல் பின்டெக் பெஸ்ட் 2026’ நிகழ்ச்சியில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
இதற்காக தனி சோதனை தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஆதார் முக அங்கீகாரத்தை மேற்கொள்ள பயனர்கள் சம்பந்தப் பட்ட நிதி நிறுவனங்களின் செயலியில் மேற்கொள்ள முடியும். இன்னொரு செயலிக்கு செல் ல வேண்டியதில்லை.
வங்கிகள், நிதி சேவைகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வர்த்தக கூட்டாளிகளின் அடையாளத்தை சரிபார்க்க ஆதார் அங்கீகார கட்டமை ப்பில் இணைய உதவும் வகையில் ‘ஆன்போர்டிங் எளிமைப்படுத்தல் வழிகாட்டி’யை யு டாய் வெளியிட்டுள்ளது.
இதன் வாயிலாக நிதித்துறை நிறுவனங்கள் ஆதார் அடிப்படையிலான அடையாள சரிபார்ப்பு வசதிகளை தங்களது மொபைல் செயலி வாயிலாக எளிதாக இணைத்து கொள்ள முடியும்.
