'வருமானம் உயரும் நம்பிக்கையில் 69.50 சதவீத கிராமப்புற குடும்பங்கள்'

கிராமப்புற குடும்பங்களில், 100ல் கிட்டத்தட்ட 70 குடும்பங்கள், அடுத்த நிதியாண்டான 2027-28ல் தங்கள் வருமானம் உயரும் என எதிர்பார்ப்பதாக ‘நபார்டு’ வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ளது. வேளாண் மற்றும் கிராம மேம்பாட்டுக்கான தேசிய வங்கியான நபார்டு, தனது மார்ச் மாத அறிக்கையில் இதை கூறியுள்ளது.

கிராமப்புற குடும்பங்களின் நிலை

வருமான எதிர்பார்ப்பு

69.50% கிராமப்புற குடும்பங்கள், 2027-28ல் வருமானம் அதிகரிக்கும்

இது செப்டம்பர் 2024ல் எதிர்பார்த்ததைவிட குறைவு


எதிர்பார்ப்பு ஒப்பீடு:

 2024- 25: 72.20%

 நவம்பர் 2025: 75.90% (அதிகபட்சம்)

எதிர்பார்ப்பு சரிய காரணம்

மேற்கு ஆசிய மோதல் (பிப்ரவரி28, 2026)

கிராமப்புற வளர்ச்சி வேகத்தில் சற்று மந்தம்

Image 1566119

Source link