நியூயார்க்: வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, 63, மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ், 69, மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி அவர்களது வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் போதை பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி, கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ராணுவத்தினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அவர்களை நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அமெரிக்க நீதிமன்றத்தில் மதுரோ மற்றும் அவரது மனைவி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தின் படி, வெளிநாட்டு அதிபர் அல்லது தலைவர்கள் மீது மற்ற நாடுகள் கிரிமினல் வழக்கு தொடர முடியாது என்றும், இந்த விதியின் அடிப்படையில் மதுரோ மற்றும் சிலியாவை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மனு மீதான விசாரணையை வரும், நவ., 17ம் தேதிக்கு மான்ஹட்டன் பெடரல் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
