அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராப்புரம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், தவெகவுக்கு இந்த இரண்டு தொகுதிகளும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தமிழக சட்டமன்றத்தில் தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கத் தேவையான மந்திர எண் 118 ஆகும். தற்போது ஆளும் தவெக தலைமையிலான விஜய் அரசிற்குச் சட்டமன்றத்தில் 120 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இருப்பினும், இந்த எண்களைத் தக்கவைத்துக்கொள்வதில் சிக்கல் உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தவெக கூட்டணியின் தற்போதைய பலம்
தவெகவின் நேரடிக் கூட்டணியில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை 116-ஆக இருக்கிறது. வெளியிலிருந்து ஆதரவு தரும் இடதுசாரிகளின் 4 எம்.எல்.ஏ-க்களைச் சேர்த்தே இந்த பலம் 120 உள்ளது. சமீப நாட்களாகவே இடதுசாரி கட்சிகள் ஆளும் கட்சியான தவெகவுக்கு எதிராக போராட்டங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பாஜகவின் உத்தரவுகளை நிறைவேற்றும் தமிழக வெற்றிக்கழக அரசை நாங்கள் ஏன் ஆதரிக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சிபிஎம் கொடுக்கும் அழுத்தம்
மேலும் பாஜக சொல்படிதான் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் இல்லை எனவும், விஜய் பிரதமர் வேட்பாளர் எனவும் தவெக முன்னிறுத்துவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. மறுப்புரம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ சையத் பாரூக் பாஷா கோடிக்கணக்கான பணத்துடன் அமைச்சர் பதவி தருவதாக தமிழக வற்றைக் கழகம் பேரம் பேசியதாக பொதுக்குழு கூட்டத்தில் பேசியது பரபரப்பு ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள சு வெங்கடேசன் விஜய்க்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துப் பேசி வருகிறார். இதுதான் தாமிரகாவுக்கு எதிராக சண்முகம் மற்றும் வீரபாண்டியன் பேச்சுக்களுக்கு எதிரொளியாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்து வெளிநாட்டுக்கு செல்லும் முன் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை விஜய் கூட்டு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்
இந்த நிலையில் தான் தவெக அரசின் மீதான அதிருப்தியைத் தெரிவித்தும் வருகின்றனர். ஒருவேளை இடதுசாரிகள் தங்களது ஆதரவை விலக்கிக்கொண்டால், தவெக கூட்டணியின் பலம் 116-ஆகக் குறைந்து, ஆட்சியின் பெரும்பான்மை கேள்விக்குறியாகும் சூழல் உருவாகும். இப்படியான அரசியல் அக்டோபர் 6 அன்று நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தைச் சூடேற்றியுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் சவால்
அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததாலேயே இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், தவெகவின் தனிப்பட்ட பலம் 109-ஆக உயரும். இதன் மூலம் இடதுசாரிகள் இல்லாமலேயே கூட்டணிக் கட்சிகளின் நேரடி பலம் 118 என்ற மாய எண்ணைத் தொட்டுவிடும். இது வெளி ஆதரவை நம்பியிருக்காமல் ஆட்சிக்கு முழுமையான தனித்து செயல்பட முடியும் .
வாக்கு வங்கி என்பது வேட்பாளர்களுக்கு அல்ல, இரட்டை இலை சின்னத்திற்குத்தான் என்பதை நிருபிக்க வேண்டிய கௌரவப் போராட்டம் அதிமுகவுக்கு உள்ளது. கட்சிக்குள் போர்க்கொடி உயர்த்தியுள்ளவர்களின் குரல்களை அடக்கவும், இத்தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி தேவைப்படுகிறது. இவ்விரு தொகுதிகளையும் கைப்பற்றி, தவெக அரசின் பெரும்பான்மை பலத்தை 116 என்ற நிலையிலேயே முடக்கி, சட்டமன்றத்தில் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த திமுக தீவிரமாக வியூகம் வகுத்து வருகிறது.
திமுக வியூகம் என்ன?
இந்த இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றி, தவெக அரசின் பெரும்பான்மை பலத்தை 116 என்ற நிலையிலேயே முடக்கி, சட்டமன்றத்தில் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த திமுக தீவிரமாக வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக கட்சி ரீதியாக மாற்றங்களை செய்துள்ளார் மு.க.ஸ்டாலின். இது திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு டூ ஆர் டை தேர்தலாகவே பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகளின் கணக்கு இதுவென்றால், மக்களின் கணக்கு என்ன என்பதை அறிய அக்டோபர் 9-ஆம் தேதி வரை காத்திருப்போம்.
