இந்த ஆலோசனைக் கூட்டத்தில், த.வெ.க தலைமையில் கூட்டணி அமைப்பது, கூட்டணிக்கு அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டுவது, கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளரை முறைப்படி நியமிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் வியூகங்கள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இன்று நடைபெறும் கூட்டத்தில் தவெக கூட்டணிக்கு மாநில அளவில் பெயர் வைப்பதா? அல்லது தேசிய அளவில் பெயர் வைப்பதா? என்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இந்த கூட்டத்தில் பங்கேற்க மாணிக்கம் தாகூர், தாரகை கத்பட், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய மூவரை குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.
