சினிமா துறையில் இருந்த வரையில் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் எதிர் எதிராகவே இருந்தனர். அதிகமாக பேசிக் கொண்டதில்லை; அதிகமாக சந்தித்துக் கொண்டதில்லை. ஆனால் இருவரது பாதையும் வேறு வேறான நிலையில், தற்போது நெருங்கிய நண்பர்கள் போல சிரித்து பேசிக் கொள்வது, அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பின்னர் அரசியல் சூட்சுமம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
முதல்வர் விஜய் மற்றும் நடிகர் அஜித்தின் இந்த சந்திப்பு, தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பலமாக எதிரொலிக்கும் எனவும் விமர்சனம் செய்யப்படுகிறது. விஜய் மற்றும் அஜித்தின் இந்த சந்திப்பால் இடைத்தேர்தலில் அஜித் ரசிகர்களின் வாக்கு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.
இது மட்டுமல்ல அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இது எதிரொலிக்கும் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதல்வர் விஜய்க்கு இணையான ஒரு பெரும் ரசிகர் கூட்டம் அஜித்திற்கும் இருக்கிறது. ஆகையால் நடிகர் அஜித்துடன் நட்புறவை மேம்படுத்தினால் அது தவெக-விற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என முதல்வர் விஜய்க்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் முதல்வர் விஜய் மற்றும் அஜித் இடையேயான நட்பு தற்போது வெளியுலகம் வியக்கும் அளவிற்கு உள்ளது.
