விஜய் பிரதமர் வேட்பாளார்.. தவெகவினர் இடையில் மாறுப்பட்ட கருத்து: அமைச்சரின் புதிய விளக்கம் – minister venkataramanan clarifies the view expressed by tvk members that vijay will be the next pm

தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலரும் சிஎம் விஜய் அடுத்த பிரதமர் என தொடர்ச்சியாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதனிடையில் நேற்றைய தினம் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், 2029 விஜய் பிரதமர் ஆவார் என உறுதியாக பேசினார். இந்நிலையில் தவெகவினரின் இந்த கருத்து குறித்து அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

நேற்றைய தினம் தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், 2029 ஆம் ஆண்டு முதல்வர் விஜய் பிரதமர் ஆவார் என பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே, விஜய்யின் கையை பிடித்து பிரதமர் நாற்காலியில் அமிய வைப்பார் என பேசியிருந்தார். இந்நிலையில் அமைச்சர் வெங்கடரமணன் , தவெக சார்பில் யாரும் விஜய் பிரதமர் ஆவார் என்று சொல்லவில்லை என புதிய கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.

Source link