விதிமுறை இல்லாத உலகம் ஆபத்தை ஏற்படுத்தும்: சீன அதிபர் எச்சரிக்கை

புதுடில்லி: விதிமுறை இல்லாத உலகம் ஆபத்தை ஏற்படுத்தும் என பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய சீன அதிபர் ஷீ ஜின்பிங் கூறியுள்ளார்.

சீன அதிபர் ஷீ ஜின்பிங் பேசியதாவது: விதிமுறைகள் இல்லாத உலகம், போக்குவரத்து சிக்னல்கள் இல்லாத சந்திப்பைப் போன்றது. அங்கு குழப்பமும், ஒழுங்கின்மையும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. எனவே, ஏற்கனவே உள்ள சர்வதேச விதிகள் அனைத்து நாடுகளுக்கும் சமமாக பொருந்த வேண்டும். அவற்றை சில நாடுகள் தங்களுக்கு சாதகமாக மட்டும் பயன்படுத்தக் கூடாது. நாடுகளின் அளவு, பலம், செல்வம் ஆகியவற்றில் வேறுபாடு இருந்தாலும், சர்வதேச சமூகத்தில் அனைத்து நாடுகளும் சமமானவை. இறையாண்மை, உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமை, பிரச்னைகளுக்கு அமைதியான தீர்வு காண்பது போன்ற அடிப்படை கொள்கைகள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும்.

வளரும் நாடுகளுக்கு சர்வதேச நிதி அமைப்புகளில் கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை அதிகரிக்க, ஐந்து அம்ச திட்டத்தை சீனா முன்வைக்கிறது. செயற்கை நுண்ணறிவு, வர்த்தகம், டிஜிட்டல் தொழில்நுட்பம், நவீன உற்பத்தி மற்றும் அறிவியல் – தொழில்நுட்பம் ஆகியவை இதில் முக்கிய இடம் பெறுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

Source link