விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை

விநாயகர் சதுர்த்தி

நாளை விநாயகர் சதுர்த்தி கோலகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவில் பூஜைக்காக பயன்படுத்தப்படும் மலர்களின் விலை சந்தையில் கணிசமான உய்ர்ந்துள்ளது.

விலை உயர்வு

முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி என்பதால் உள்ளூர் சந்தை மற்றும் மாவட்டத்தின் முக்கிய சந்தைகளில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

குறிப்பாக, சென்னை கோயம்பேடு, திண்டுக்கல், மதுரை, தோவாளை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய சந்தைகளில் பூக்களின் விலைு கணிசமாக உய்ர்ந்துள்ளது.

நிர்ணயம்

கடந்த வாரம் கிலோ ரூ.500க்கு விற்பனையான மல்லிகை பூ இன்று ரூ.2000க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மாலை கட்ட பயன்படும் சம்பங்கி, செவ்வந்தி, ரோஸ், அரளி, செண்டுமல்லி உள்லிட்ட பூக்களின் விலையும் கடுமையாக உயர்துள்ளது. மேலும், சாமந்தி ரூ.250-க்கும், முல்லை ரூ.900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source link