கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த சூழலில் விநாயகர் சதுர்த்தி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பான தகவல்களை தமிழக அரசு பகிர்ந்துள்ளது.
செப்டம்பர் 14, 2026 திங்கள் அன்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதியை ஒட்டி வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. எனவே பொதுமக்கள் வெளியூர் பயணங்களுக்கு முன்கூட்டியே திட்டமிட்டனர். ஒருபுறம் அரசு முன்பதிவு பேருந்துகளில் டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்ட நிலையில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – பயணிகள் அவதி
குறிப்பாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் கிடைக்கவில்லை என்று பலரும் புகார் கூறுகின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் பல்வேறு ஊடகங்களில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளன. முன்பதிவில்லா பேருந்துகளுக்காக நீண்ட காத்திருந்து ஏமாற்றம் அடைந்து, கிளாம்பாக்கத்தில் உள்ள போக்குவரத்து துறை அதிகாரிகள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பைக் டாக்சிக்கள் மட்டும் பிரச்சினை இல்ல! அரசுக்கு செயல்தலைவர் வைத்த கோரிக்கை
கிளாம்பாக்கத்தில் பயணிகள் முன்வைக்கும் புகார்கள்
பல்வேறு ஊர்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் சரியான நேரத்திற்கு இயக்கப்படவில்லை. பேருந்துகள் புறப்படும் நேரம் உள்ளிட்ட தகவல்களை அதிகாரிகள் முறையாக தெரிவிக்கவில்லை. பயணிகள் தெரிவிக்கும் புகார்களை கேட்டு தீர்வு சொல்வதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் யாருமே பேருந்து நிலையத்தில் இல்லை. பேருந்துகள் ஏராளமான நிற்கின்றன. ஆனால் ஓட்டுநர்கள் யாரும் இல்லை. இதுபற்றி கேட்டால் ஓய்வெடுப்பதாக கூறுகின்றனர். திருச்சி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற டெல்டா மாவட்டங்களுக்கு போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்த பேருந்துகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாற்று பேருந்துகள் இல்லாத்தால் அதிகாரிகள் உடன் வாக்குவாதம். இந்நிலையில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி விடுமுறையை ஒட்டி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு புள்ளிவிவரங்களை பகிர்ந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி விடுமுறை – கூடுதல் பேருந்துகள் இயக்கம்
போக்குவரத்து கழகங்கள் 2025 2026 கூடுதல் எண்ணிக்கை விழுப்புரம் 1,605 2,223 618 (39%) கும்பகோணம் 612 1,049 437 (71%) சேலம் 185 259 74 (40%) மதுரை 74 120 46 (62%) திருநெல்வேலி 30 64 34 (113%) கோவை 41 57 16 (39%) SETC 766 807 41 (5%) MTC 0 50 50 (100%) மொத்தம் 3,313 4,629 1,266 (38%)
தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?
கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்பட்டாலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதிப்படும் வீடியோ காட்சிகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. தற்போதைய சூழலில் இரண்டு விஷயங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் கவனிக்க வேண்டியுள்ளது. ஒன்று, கூடுதல் பேருந்துகளுக்கு ஏற்ப ஓட்டுநர்களை பயணிக்க நியமிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தை அறிவித்து விட்டு, அதன்படி சரியாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பலரும் அறிவுறுத்தியுள்ளனர்.
Source link
