பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.97.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மழை நிலவரம்: நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், நெல்லை, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
-
Sep 13, 2026 07:47 IST
சகிக்க முடியவில்லை – சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம்
திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது. “திமுக தலைவர்களில் சிலர் தொடர்ந்து பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதும் அதைக்கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரிப்பதும் சகிக்க முடியவில்லை”. அமைச்சர் நிர்மல்குமார் பேசியதை கண்டியுங்கள், அவரது தாயாரை இழிவுபடுத்துவதை எப்படி திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்? “பெண்களை இழிவுபடுத்தி பேசுபவர் யாராக இருந்தாலும் அந்தந்த கட்சி தலைமை கண்டிக்க வேண்டும்” என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
-
Sep 13, 2026 07:46 IST
வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், நாதக வேட்பாளர்கள் இன்று மதியம் அல்லது மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு. மதுராந்தகத்தில் ஏற்கனவே போட்டியிட்டவருக்கு மீண்டும் வாய்ப்பு. தாராபுரத்தில் புதிய நபரை களமிறக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.
-
Sep 13, 2026 07:45 IST
ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் மீது வழக்கு
சென்னை சைதாப்பேட்டை கலைஞர் வளைவு முன்பு முதலமைச்சர் விஜய்யின் பேச்சை கண்டித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக எம்.பி ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Sep 13, 2026 07:44 IST
மழை நிலவரம்
நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், நெல்லை, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
-
Sep 13, 2026 07:44 IST
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.97.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
