வியட்நாம் சென்றார் ராகுல்: பாஜ கிண்டல்

புதுடில்லி:

காங்கிரஸ் எம்பி ராகுல் அவ்வப்போது வெளிநாடு பயணம் மேற்கொள்வார். அப்போது அங்கு அவர் செய்யும் விமர்சனம் சர்ச்சையை ஏற்படுத்தும். கடந்த சில நாட்களாக டில்லியில் எஸ்ஐஆர் மற்றும் தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தார். இதனிடையே அவர் வியட்நாம் செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், விமானத்தில் அவர் பயணிப்பது போன்ற வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்ட பாஜ, ” பொய் பரப்புவதில் சோர்வடைந்து விட்டேன். சில நாட்கள் வியட்நாம் செல்ல உள்ளேன். இது யாருக்கு தெரியப்போகிறது,” என பதிவிட்டது.

பாஜ செய்தித்தொடர்பாளர் ஆர்பி சிங் வெளியிட்ட அறிக்கையில், ” ஒவ்வொரு முறையும் ராகுல் செய்வதை பார்க்க வேண்டும். பீஹாரில் யாத்திரை மேற்கொண்ட பிறகு, அவர் இரண்டு மாதம் விடுமுறைக்காக வெளிநாடு சென்றார். அப்போது அவர் வியட்நாம் சென்றிருக்கலாம். தற்போதும் அவர் வியட்நாம் செல்லக்கூடும் எனக்கூறினார்.

ஷாஜியா இல்மி கூறுகையில், ‘ராகுலால் மேலும் பொறுக்க முடியவில்லை. இன்னும் எவ்வளவுதான் அவரால் கடினமாக உழைக்க முடியும்? ஓட்டுத் திருட்டுப் பிரச்னை என்பது ஒரு சாக்குப்போக்கு மட்டுமே. அவர் எவ்வளவு சோம்பேறி என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது அவரது சுற்றுலா மீண்டும் துவங்கியது. இரண்டு வாரங்கள் கூட அவரால் வேலை செய்ய முடியாமல் கிளம்பிவிட்டார் என்பது தெரிகிறது. இந்த முறை, அவர் வியட்நாம்சென்றுள்ளார்,’ எனக் கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள காங்கிரசின் சந்தீப் தீக்சித், ”யார் எங்கு சென்றால் என்ன? இதில் என்ன பிரச்னை உள்ளது. மற்றவர்கள் யாரும் வெளிநாடு செல்லவில்லையா. ராகுல் தனி நபர். எதிர்க்கட்சி தலைவர். அவருக்கு என கடமைகள உள்ளன. யேல் பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாடினார்.லண்டனில் மாணவர்களுடன் பேசிய அவர், கல்வியாளர்களுடனும் கலந்துரையாடினார். பத்திரிகையாளர்களையும் சந்தித்தார்.

இதில் பாஜவுக்கு என்ன பிரச்னை.

லோக்சபா கூடும்போது பிரதமர் வெளிநாடு செல்லக்கூடாது என்ற பாரம்பரியத்தை கடைபிடித்தோம். ஆனால், நமது பிரதமர் அதனை உடைத்துவிட்டார். அப்போது யாரும் அதனை ஏன் கேட்கவில்லை எனக்கூறினார்.

Source link