“விரைவில் திரையரங்கில் சந்திக்கிறோம்” – விஜய் சேதுபதி கொடுத்த அப்டேட்

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பாக்கெட் நாவல்’. சூப்பர் டீலக்ஸ் படத்தை தொடர்ந்து மீண்டும் இருவரும் இப்படத்திற்கு இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் என்ற நிறுவனம் கீழ் தியாகராஜன் குமாரராஜா தயாரிக்கவும் செய்கிறார். 

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மாளவிகா மோகனன், கிஷோர் மற்றும் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கிறார். தமிழ், கன்னடம் உட்பட நான்கு மொழிகளில் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் முழுவதும் நிறைவடைந்தது.

அண்மையில் இப்படத்தில் இளையாராஜாவுக்கு பதில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த சூழலில் இப்படத்தின் புது அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் விஜய் சேதுபதி டப்பிங் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. விரைவில் படம் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விஜய் சேதுபதி வீடியோ இறுதியில் தெரிவிக்கிறார். 

Dubbing officially begins for Thiagarajan Kumararaja’s #PocketNovel !#ThiagarajanKumararaja@VijaySethuOffl@MalavikaM_@RajbShettyOMK#ActorKishore@dhilipaction@tylerdurdenand1#NiravShah@andrewxvasanth@Emadhi161@just_cut_it@YugabhaarathiYb@artdir_raja@gopiprasannaapic.twitter.com/L3IksohvN3