வில்லனாக நடித்த கமல்; அதே படத்தின் ரீமேக்கில் வில்லன் ஆன ரஜினிகாந்த்: 2 படமும் சூப்பர் ஹிட் ஆச்சு

தமிழில் ரஜினிகாந்த் நடித்த படத்தின் ரீமேக்கில் தான் வில்லனாக நடித்ததாக கூறியுள்ள கமல்ஹாசன், ஒரே ஸ்டைலை பண்ணாமல் வித்தியாசமாக பண்ணுங்க என்று நான் சொன்னபோது ரஜினிகாந்த் அதை ஏற்க மறுத்துவிட்டார் என்று கூறியுள்ளார். 

ஸ்ரீதேவி ரஜினிகாந்த் இருவரும் திரையுலகில் மெதுவாகத் தங்களது காலடிகளைப் பதித்துக் கொண்டிருந்தபோது, கமல்ஹாசன் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது முத்திரையைப் பதித்து, தென்னிந்தியா முழுவதும் ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி, ஒரு சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தார். ஸ்ரீதேவி மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரின் அறிமுகம் கமல்ஹாசனுடன் இணைந்தே அமைந்தது. 

தென்னிந்தியாவில் ஏற்கனவே ஒரு புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரமாக இருந்த ஸ்ரீதேவி, ‘மூன்று முடிச்சு’ (1976) திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானார். அதேபோல், ரஜினிகாந்த் தனது முதல் திரைப்படமாக ‘அபூர்வ ராகங்கள்’ (1975) படத்தில் அறிமுகமானார். இந்தத் திரைப்படத்திலும் கமல்ஹாசனே முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இதில் குறிப்பிடத்தக்க மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த இரண்டு திரைப்படங்களையும் இயக்குனர் கே.பாலச்சந்தரே இயக்கியிருந்தார். ஸ்ரீதேவி ‘மூன்று முடிச்சு’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானபோது அவருக்கு வயது வெறும் 13 தான்; அப்போது கமலுக்கு 22 வயதும், ரஜினிகாந்திற்கு 26 வயதும் ஆகியிருந்தது. தெலங்கில் 1974-ம் ஆண்டு ஓ சீதா கதா என்ற படத்தின் ரீமேக் தான் மூன்று முடிச்சு. தமிழில் இந்த படம் 1976-ம் ஆண்டு வெளியானது, 

ஸ்ரீதேவியும் கமல்ஹாசனும் காதலிக்கும்போது ஸ்ரீதேவி மீது ஆசைப்படும் ரஜினிகாந்த் கமல்ஹாசனை தண்ணீரில் தள்ளி கொலை செய்துவிடுவார். அதன்பிறகு ஸ்ரீதேவி ரஜினிகாந்தை எப்படி பழிவாங்குகிறார் என்பது தான் படத்தின் கதை. இந்த படத்தில் கமல்ஹாசன் பாலாஜி என்ற கேரக்டரிலும், ஸ்ரீதேவி செல்வி என்ற கேரக்டரிலும், ரஜினிகாந்த் பிரசாத் என்ற கேரக்டரிலும் நடித்திருந்தனர், தமிழில் இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 

இந்த படம் தமிழில் ரீமேக் செய்வதற்கு முன்பே மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டது. மாட்டொரு சீதா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட படத்தில் வில்லன் கேரக்டரில் கமல்ஹாசன் நடித்திருந்தார். மலையாளத்தில் ஷோபனா நடித்த கேரக்டரில் தான் தமிழில் ஸ்ரீதேவி நடித்திருந்தார். மலையாளத்தில் கமல்ஹாசன் நடித்த வில்லன் கேரக்டரை தான் தமிழில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். மலையாளத்தில் வில்லனாகவும், தமிழில் ஹீரோவாகவும் கமல்ஹாசன் நடித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் முரட்டுக்காளை படம் நான் பண்ண வேண்டிய படம் என்றும் கமல் கூறியுள்ளார். 

Source link