வெளிசந்தையில் இருந்து 7,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்; 3-வது டெண்டரை வெளியிட்ட மின்சார வாரியம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மை காலமாக அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவதாக புகாா்கள் எழுந்து வருகின்றன. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன், சிறு தொழில்கள், வணிக நிறுவனங்களின் செயல்பாடுகளும் பாதிக்கப்படுகின்றன. மின் தடை காரணமாக மக்கள் சிலர் சாலை மறியலிலும் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

முஸ்லிம் மதத்திற்கு மாறிய இந்துக்களுக்கான இடஒதுக்கீட்டை பாதுகாக்க சட்ட திருத்தம் செய்யப்படும்: நிர்மல் குமார் உறுதி

இதையடுத்து, சமீபத்தில் மின்தேவையைச் சமாளிப்பதற்காக வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 7-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரியது. இதில் ஒரு யூனிட் ரூ.35-க்கு தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் கோரியது. கடந்த தி.மு.க ஆட்சியில் ஒரு யூனிட் ரூ.20-க்கு ஒப்பந்தம் கோரிய நிலையில் தற்போதைய த.வெ.க அரசின் இந்த ஒப்பந்தம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், அரசியல் தலைவர்கள் பலர் இதனை விமர்சனம் செய்தனர். இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய 3-வது குறுகிய கால டெண்டரை வெளியிட்டுள்ளது. மாதந்தோறும் 1,000 மெகாவாட் வீதம், 7 மாதங்களுக்கு மொத்தம் 7,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. 

நவம்பர் 1-ஆம் தேதி முதல் மே.31- ஆம் தேதி வரை கொள்முதல் செய்ய டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் மின்தேவை அதிகரித்து வரும் நிலையில், மின் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை தவிர்க்க இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link