மும்பை: பிரபல இந்தி நடிகர் டைகர் ஷெராப்பை சுட்டுகொல்ல முயற்சி நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி டைகர் ஷெராப் உயிர் தப்பினார். டைகர் ஷ்ராப் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பில் மகன் ஆவார்.
பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப். இவர் இன்று மாலை மும்பையில் உள்ள ஜுஹு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் டைகர் ஷெராப்பின் கார் டிரைவர் மற்றும் அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு நபர் என இருவர் காயம் அடைந்தனர்.
எனினும், அதிர்ஷ்டவசமாக டைகர் ஷெராப் காயமின்றி தப்பினார். கால்பந்து மைதானத்தில் இருந்து நடிகர் கிளம்பிய போது இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. டைகர் ஷெராப் ஏன் குறிவைக்கப்பட்டார்.. அவரை கொல்ல முயற்சி நடைபெற்றதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் என்று அனில் பண்டிட் என்பவர் பேசும் காட்சிகள் உள்ளன. அவர் கூறும் போது, “தங்களது டார்கெட் லிஸ்ட்டில் ஷெராப் உள்ளார். எங்களது அறிவுறுத்தல்களை அவர் பின்பற்றவில்லை. சல்மான் கானுடன் இணைந்து நடித்து வந்தார்” என்று கூறினார்.
