முந்திரி (பிரீமியம்)
கடந்த வாரம் : ரூ. 1,050.00
தற்போது : ரூ. 1,100.00
முந்திரி இறக்குமதி குறைந்துள்ளது. அதனால் விலை உயர்ந்துள்ளது. சாதாரண முந்திரி கிலோ 700 ரூபாய்க்கும், பிரீமியம் 1,100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. உள்நாட்டு தேவை அதிகரித்துள்ளதால், மேலும் விலை உயர வாய்ப்புள்ளது.
சந்தை
பண்ருட்டி, கடலுார்.
கொள்ளு
கடந்த வாரம் : ரூ. 54.00
தற்போது : ரூ. 57.00
வரத்து சீராக உள்ளது. அதேநேரம் விலை உயர்ந்துள்ளது. கருப்பு கொள்ளு கிலோ 80 ரூபாய்க்கும், பழுப்பு நிற கொள்ளு 57 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும், விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை
வேலுார்.
சின்ன வெங்காயம்
கடந்த வாரம் : ரூ. 76.00
தற்போது : ரூ. 69.00
விலை உயர்ந்துள்ளதால், இருப்பிலுள்ள வெங்காயத்தை விவசாயிகள் அதிகம் கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் கிலோ 76 ரூபாய்க்கு உச்சம் தொட்ட சின்ன வெங்காயத்தின் விலை, இந்த வாரம் 69 ரூபாயாக குறைந்துள்ளது.
சந்தை
செட்டிக்குளம், பெரம்பலுார்.
