சென்னை : சமீபத்தில் தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு தமிழக ஸ்டார்ட் அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் ( டான்சிம்) தலைவர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
அதிமுக ஐடி விங் தலைவர், மண்டல செயலர், மாணவர் அணி செயலர் போன்ற பொறுப்புகளில் இருந்தவர் சிங்கை ராமச்சந்திரன். லோக்சபா தேர்தலில் கோவையில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த மாதம் அ.தி.மு.கவில் இருந்து விலகினார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் சேர்ந்தார்.
இந்நிலையில், தமிழக ஸ்டார்ட் அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன்(TANSIM) தலைவராக சிங்கை ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
