தி.மு.க சார்பில் ஆண்டு தோறும் முப்பெரும் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தி.மு.க தொடங்கிய நாள் (செப்டம்பர் 17), தி.மு.க நிறுவனர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்டம்பர் 15) மற்றும் தந்தை பெரியார் பிறந்த நாள் (செப்டம்பர் 17) என மூன்று முக்கிய நிகழ்வுகளையும் ஒன்றாக இணைத்து முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.
ஆ. ராசா மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு: சேகர் பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீதும் பாய்ந்த வழக்கு
இந்த முப்பெரும் விழாவின் போது, தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா செப்டம்பர் 15-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தி.மு.க தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக இன்று நடைபெற இருந்த முப்பெரும் விழா ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக துரை முருகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “தி.மு.க தலைவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, இன்று (15-09-2026) மாலை, சென்னை – அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறவிருந்த “முப்பெரும் விழா” ஒத்திவைக்கப்படுகிறது. விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
