ஸ்டாலின் தாடை உடைப்பு சர்ச்சை: முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதில்!

திமுக தலைவர் ஸ்டாலின் பேசும் அந்த வீடியோவில் “நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தில் நடைபெற்ற சில சர்ச்சைகள், தமிழ் மக்கள் மத்தியிலும் நம் உடன்பிறப்புகள் மத்தியிலும் கடுமையான கோபத்தையும், அதிருப்தியையும் உண்டாக்கியதை நான் உணர்கிறேன். இந்த சர்ச்சையில் எனது சிறை வரலாறும் இருப்பதால் நான் அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மிசா சட்டத்தை எதிர்த்து அன்று கலைஞர் கருணாநிதி மெரினாவில் மிகப்பெரிய கூட்டத்தை நடத்தி காட்டினார். அதற்கு அடுத்த நாளே திமுகவின் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆட்சி கலைக்கப்பட்ட அடுத்த நாளே, என்னை சிறையில் அடைப்பதற்காக வீட்டிற்கு காவல் துறையினர் வந்தனர்”. அப்போது கலைஞர், “என் மகன் பிரச்சாரத்திற்கு சென்றுள்ளான், அவன் வந்ததும் நானே போன் செய்கிறேன் , வந்து கைது செய்து கொள்ளுங்கள்,” என்று கூறி அனுப்பினார். அடுத்த நாள் நான் வந்ததும் கலைஞர் காவல்துறையை அழைத்து, “என் மகன் வந்து விட்டான், கைது செய்து கொள்ளுங்கள்,” என்று கூறினார்.

Source link