ஸ்ட்ரைக் வாபஸ் – ஒரே நாளில் 9 படங்கள் ரிலீஸ்! கார்த்தி, அருள்நிதி, சூரி போட்டி

‘பரோட்டா’ சூரி தற்போது ஹீரோ ஆகி விட்டார். ‘விடுதலை பாகம் 1’, ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘விடுதலை பாகம் 2’ என அவரது படங்கள் வரிசையாக வெற்றி பெற்று வருகின்றன.

‘மண்டாடி’ என்றால் கடலில் அலைபவன் (படகோட்டி) என்று அர்த்தம். ‘செல்ஃபி’ (2022) பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இதனை இயக்கியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் சொந்தப்படம் இது.

சூரி, மஹிமா நம்பியார், சத்யராஜ், கஹாஸ், பால சரவணன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ட்ரெய்லரைப்பார்த்ததில் யூகித்த கதை:

நாயகன் சிறந்த படகோட்டி வீரன். சாம்பியனான அவன், தன் சொந்தக் கடலோர கிராமத்திலிருந்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு வேறு இடத்திற்குச் செல்கிறான். வில்லன் அந்த ஏரியாவில் இரு பிரிவுகளை உருவாக்கி சண்டை மூட்டி விடுகிறான்.

நாயகன் மீண்டும் ஊருக்கு திரும்பி, படகுப்போட்டியில் கலந்துகொள்ள ஒரு குழுவிற்குப் பயிற்சி அளிக்கிறான். இறுதியில் படகுப்போட்டியில் நாயகன் வென்றானா, வில்லன் வென்றானா என்பதே க்ளைமாக்ஸ்.

ரசித்த வசனங்கள்:

  1. “இந்தக் கடல் எவ்வளவு பெருசோ, அதிலிருக்கும் ஆபத்துகள் அதைவிடப் பெருசு.”

  2. “சிங்கம் இல்லாதப்ப ஓநாய்க்கூட்டம் அரசாளும் கதையா…”

  3. “இந்த ஊரோட படகுப் பந்தயம்னா அது ‘சுனாமி ரைடர்ஸ்’ தான்… எவன் வந்தாலும் அதைத் தடுக்க முடியாது!”

  4. “லோக்கல் பசங்க இல்லாத டீம்னா அது எப்படி ஊர்க்காரங்க டீம் ஆகும்?”

  5. “பந்தயம்ங்கிறது யார் பெரிய ஆளுனு காட்டிக்கிறதுக்காக நடக்குற போட்டி இல்லை… பந்தயம்ங்கிறது அறிவு!”

  6. “தொழிலைக் காப்பாத்திக்க என்ன வேணா நான் செய்வேன்.”

  7. “உன்னை நம்புறவங்களுக்குச் சாவையும் ஒப்பாரியையும் தவிர்த்து என்னதான் நீ கொடுக்க முடியும்?”

  8. “இன்னைக்கு மட்டும் நாம ஜெயிக்கலைனா, நம்ம பசங்க கரையில நின்னு வேடிக்கை பார்க்கும் கூட்டமா மாறிடுவாங்க!”

  9. “தரையில வேணா அவன் பெரிய ஆளா இருக்கலாம்… தண்ணியில நாமதான் கிங்!”

  10. “புள்ளய எதிரிகிட்ட இருந்து காப்பாத்தி துரோகிகிட்ட ஒப்படைச்சிருக்கே…”

Source link