ஸ்ருதி ஹாசன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சமீப காலமாக ஏஐ தொழில்நுட்பம் மூலம் திரை பிரபலங்களின் போலி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் மற்றும் பிரபலங்களின் புகைப்படத்தை வைத்து போலி வியாபாரங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் அதிலிருந்து தடை கேட்டு நீதிமன்றம் சென்று அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இதுவரை கமல்ஹாசன், நாகர்ஜூனா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் தடை உத்தரவு பெற்றிருக்கிறார்கள். 

அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசனும் நீதிமன்றத்தை நாடியிருந்தார். மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த அவர், மனுவில் தனது புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்தி, டீப்ஃபேக் வீடியோ மற்றும் போலி விளம்பரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட வீடியோக்களை நீக்க வேண்டும் என்றும் தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக ரூ.15 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி மாதவ் ஜாம்தார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர், உலா வரும் டீப் ஃபேக் வீடியோக்கள் ஸ்ருதிஹாசனின் நற்பெயருக்கும் கண்ணியத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இதனால் அவரின் தனிப்பட்ட உரிமைகள் பாதித்துள்ளது. இதற்கு பணம் இழப்பீடாக வழங்க முடியாது. இதனால் ஸ்ருதிஹாசனின் அனைத்து வீடியோக்களையும் நீக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் வலைதளங்களுக்கு உத்தரவிட்டார்.  

Source link