ஹிந்தி பேசும் மாநிலத்தில் கூட விஜய்யின் தாக்கம்; சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: ஹிந்தி பேசும் மாநிலத்தில் கூட முதல்வரின் தாக்கம் பரவி இருக்கிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் பொறுத்தவரை தமிழகம் இந்தியாவிற்கு முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும்; தொழில் முதலீட்டாளர்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில் கூடுதலாக இடம்பெற வேண்டும்; அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கப்பட வேண்டும்; சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்பட வேண்டும்.

அதேநேரத்தில் மக்களுக்கு விருப்பமான, மனதில் எண்ணங்களில் இருக்கிற முதல்வராக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் விளங்கி வருகிறார். முதல்வரை பொறுத்தவரையும் தமிழக மக்கள் விரும்புவது ஒன்றே ஒன்று தான்; தமிழகத்தின் தூய்மையான ஆட்சியை நடத்துவேன் என்று துணிந்து சொன்ன ஒரே முதல்வர் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரை தவிர வேறு எவரும் இல்லை.

அனைத்து மாநிலங்களும் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறது. வட மாநிலங்களில் இருந்து கூட சில பேர் வந்த போது, அவர்கள் என்னிடம் சொன்னது ஒன்றே ஒன்று தான்; உங்கள் முதல்வரை போல எங்களுக்கும் ஒரு முதல்வர் கிடைக்க வேண்டும் என்று ஆதங்கத்தை என்னிடம் சொன்னார்கள்; ஹிந்தி பேசும் மாநிலத்தில் கூட முதல்வரின் தாக்கம் பரவி இருக்கிறது என்பதை அண்ணாதுரை பிறந்த நாளில் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

வெற்றி செல்லும்!

2026ம் ஆண்டு தேர்தலில் அமைச்சர் செங்கோட்டையன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கோபி தொகுதியில் வெற்றி பெற்ற செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்து, அதிமுக வேட்பாளர் பிரபு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Source link