திருப்பூர்: உள்நாட்டு பருத்தி விளைச்சல் சரிந்ததால், 10 ஆண் டுகளில் இல்லாத அளவுக்கு, நுாற்பாலைகள், 53 லட்சம் ‘பேல்’ (ஒரு ‘பேல்’ – 170 கிலோ) பஞ்சை நேரடியாக வாங்கியுள்ளதாக, இந்திய பருத்தி கழகமா ன சி.சி.ஐ., தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பருத்தி சாகுபடி பரப்பும், விளைச்சலும் தொடர்ந்துகுறைந்து வருகிறது. மத்திய அரசு, சிறப்பு திட்டங்கள் வாயிலாக, பருத்தி சாகுபடியை ஊக்குவிக்கிறது. நடப்பு பருத்தியாண்டில் (2025 அக்., – 2026 செப்.,), பஞ்சு உற்பத்தி, 291 லட்சம் ‘பேல்’களாக குறையுமென, மத்திய ஜவுளித்துறை தெரிவித்துள்ளது.
சீசன் துவக்கத்தில், தினசரி பஞ்சு வரத்து, 2 லட்சம் ‘பேல்’களாக இருந்தது.
பிப்., மாதத்துக்கு பிறகு படிப்படியாக குறைந்துவிட்டது. நேற்று காலை நிலவரப்படி, 3,070 ‘பேல்’கள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன. விவசாயி கள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து, நுாற்பாலைகள் பஞ்சு கொள்முதல் செய்வது வழக்கம்.
சி.சி.ஐ., இருப்பு வைக்கும் பஞ்சை, பெரும்பாலும் வியாபாரிகள் வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பதும் தொடர்கி றது.
கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில், சி.சி.ஐ., யிடம் இருந்து, அதிக அளவு பஞ்சை, நுாற்பா லைகள் நேரடியாக வாங்கியுள்ள தாக தகவல் வெளியாகி யுள்ளது.
இதுகுறித்து, இந்திய பருத்தி கழகம் (சி.சி.ஐ.,) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விவசாயிகளிடம், குறைந்தபட்ச ஆதார விலை அடி ப்படையில் வாங்கிய பஞ்சில், 88 லட்சம் ‘பேல்’ பஞ்சு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
‘கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், 53 லட்சம் ‘பேல்’களை, நுாற்பாலைகள் நேரடியாக வாங்கியுள்ளன’ என்று தெரிவித்துள்ளது.
