17 வங்கிகள் நேரடியாக தங்கம் இறக்குமதி செய்ய அரசு அனுமதி

மும்பை: இந்தியாவில் செயல்படும் 17 வங்கிகள், வெளிநாடுகளில் இருந்து நேரடியாக தங்கம், வெள்ளி இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தங்கம் இறக்குமதி செய்வதற்கு அரசு அனுமதி கோரி வங்கிகள் காத்திருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து மத்திய அரசு இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது குறித்து வெளிநாட்டு வர்த்தக டைரக்டர் ஜெனரல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:

* தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ள வங்கிகள் பட்டியல்

ஆக்சிஸ் வங்கி

பேங்க் ஆப் இந்தியா

டச்சஸ் பேங்க்

பெடரல் பேங்க்

எச்.டி.எப்.சி., வங்கி

இன்டஸ்ட்ரியல் அண்ட் கமர்சியல் பேங்க் ஆப் சீனா

ஐசிஐசிஐ வங்கி

இன்டஸ்இந்த் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

கோடக் மகேந்திரா வங்கி

கரூர் வைஸ்யா வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி

ஆர்.பி.எல். வங்கி

பாரத ஸ்டேட் வங்கி

எஸ் பேங்க்

* இவை தவிர, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எஸ்பிஇஆர் வங்கி ஆகியவை தங்கம் இறக்குமதிக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதற்கு ஏற்பட்ட தாமதம் காரணமாக, அக்சய திருதியை முன்னிட்டு தங்கம் பற்றாக்குறை ஏற்பட்டதாக தங்க வியாபாரிகள் புகார் எழுப்பினர். இதையடுத்து வழங்கப்பட்டுள்ளது இந்த அனுமதி, 2029ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை செல்லுபடியாகும்.

Source link