இன்று (அக்டோபர் 24) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.80 உயர்ந்து ரூ.1,04,560-க்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.220-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.4,080 வரை சரிந்தது. அமெரிக்காவில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்துள்ளதாக நகைக்கடை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தங்க முதலீடுகள் மேலும் குறைந்தால், இந்திய சந்தையில் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே சரிய அதிக வாய்ப்புள்ளது. ரெப்போ வட்டி உயர்வும் இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தங்கத்தின் விலை அக்டோபர் மாதத்தில் மேலும் சரிய வாய்ப்புள்ளது.
தங்கம் மட்டுமின்றி வெள்ளி விலையும் சரிந்து வருவது நடுத்தர மக்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்:
நேற்று (அக்டோபர் 23) 1 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.175 குறைந்து ரூ.13,060-க்கும், ஒரு சவரன் ரூ.1,400 குறைந்து ரூ.1,04,480-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.225-க்கு விற்பனையானது.
