இன்று (அக்டோபர் 29) 22 காரட் ஆபரணத் தங்கம் மாற்றமின்றி ரூ.1,05,560-க்கு நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.215-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,000 வரை உயர்ந்தது. திங்கட்கிழமை ரூ.120, செவ்வாய்க்கிழமை ரூ.400 மற்றும் நேற்று புதன்கிழமை ரூ.480 என இந்த உயர்வு மெல்ல மெல்ல அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் தங்கத்தின் விலை சரிந்ததால், மகிழ்ச்சியடைந்த நடுத்தர வர்க்கத்தினர், இந்த வார விலை உயர்வைக் கண்டு கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் தங்கத்தின் விலை மேலும் உயருமா அல்லது மீண்டும் குறைய வாய்ப்பு இருக்கிறதா என்ற எதிராபார்ப்பு நிலவி வருகிறது.
பல மாதங்களாக தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே வரும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சாமானிய மக்களுக்கு நல்ல செய்தி எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு மெல்ல மெல்ல மங்கத் தொடங்கி விட்டது. தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் சூழலில், அடுத்தடுத்த நாட்களில் விலை நிலவரம் எப்படி இருக்கப் போகிறது என்பதே கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்:
நேற்று (அக்டோபர் 28) தங்கம் 1 கிராம் ரூ.60 உயர்ந்து ரூ.13,195-க்கும், ஒரு சவரன் ரூ.480 உயர்ந்து ரூ.1,05,560-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.220-க்கு விற்பனையானது.
