2026 செப்டம்பர் 11: தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!

இந்திய சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று (செப்டம்பர் 10) ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.880 உயர்ந்தது. இதன்படி நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கும், ஒரு சவரன் ரூ.880 உயர்ந்து ரூ.1,14,040-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை நேற்றும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.255-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 11) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,920 குறைந்து, ரூ.1,12,120-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.245-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது.

Source link