தங்கத்தின் விலை நேற்று (செப்டம்பர் 7) ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்தது. இதன்படி நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.140 அதிகரித்து ரூ.14,270-க்கும், ஒரு சவரன் ரூ.1,120 அதிகரித்து ரூ.1,14,160-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலை கடந்த 5 நாட்களாகவே மாற்றமின்றி 1 கிராம் ரூ.255-க்கு விற்பனையாகி வருகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,16,040-க்கு விற்பனையானது. இன்றைய நிலவரப்படி படி பார்த்தால் கடந்த சில தினங்களில் தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றமில்லை. வெறும் 2,000 ரூபாய் தான் குறைந்துள்ளது.
அடுத்த பத்து நாட்களில் விலை ஏறுமா அல்லது குறையுமா என்பதைக் கணிப்பது கூட கடினம் தான். தங்கம் வாங்க நினைத்தால் கையில் பணம் இருக்கும் போதே வாங்கி விடுங்கள். தங்கம் வாங்குவதில் காத்திருப்பது என்பது பலன் தராது.
