பிரசாந்தின் முந்தைய கணிப்புகளில் நேபாளத்தில் நடைபெற்ற ஆட்சி கவிப்பு , ஜென் சி தலைமுறையினரின் போராட்டம் ஆகியவற்றை துல்லியமாக, அவை நடைபெறும் முன்னரே கணித்து வெளியிட்டு இருந்தார். சமீபத்தில் சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டில் மதரீதியாக வன்முறைகள் நடைபெறும் என்று கணித்து வெளியிட்டு இருந்தார். மேலும் ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர்களை பற்றியும் , அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் துவங்கி , உலகம் முழுக்க எரிபொருள் தட்டுப்பாடு நிலவ இருக்கும், என்பதையும் முன்கூட்டியே கணித்து வெளியிட்டு இருந்தார்.
இவர் கூறிய இந்த கணிப்புகள் அனைத்தும் நடைபெற்றதால் அவரது கணிப்புகளுக்கு மவுசு கூடியது. இவர் தற்போது நடிகர் தனுஷ் குறித்தும் நடிகர் அஜித் குறித்தும் வெளியிட்டுள்ள கணிப்புகள் வரவேற்பினை பெற்று வருகிறது. பிரசாந்த் தனுஷ் பற்றி , “தனுஷ் விரைவில் 2028 அல்லது 29ஆம் ஆண்டு கால வாக்கில் அரசியலில் நுழைவார் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், விஜய்க்கு கிடைத்தது போன்ற உடனடியான வெற்றி அவருக்கு கிடைக்காது. அதே வேளையில் ஒரு நடிகராக அவருக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் உண்டு , விஜய் போன்று வெற்றி பெற வேண்டும் என்றால் அது அஜித்தால் மட்டும் முடியும்” என்று கூறியுள்ளார்.
