சென்னை : சூரி நடிப்பில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி வெளியான மண்டாடி திரைப்படம் முதல் 2 நாட்களை விட 3வது நாளில் நல்ல முன்னேற்ற பாதையில் போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக சனிக்கிழமை என்பதால் தியேட்டரில் கூட்டம் அதிகரித்த நிலையில் படத்தின் வசூல் மேலே போயிருக்கிறது. முதல் நாளிலே மண்டாடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
கார்த்தியின் சர்தார் 2 வெளியான அதே நாளில் மண்டாடி வெளியாகி போட்டி இருந்தாலும் தமிழ்நாடு வசூலில் சூரியின் படம் முதல் நாளிலேயே கவனம் ஈர்த்து இந்திய அளவில் 4.25 கோடி நெட் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இப்போது வெளியாகியுள்ள ஆரம்ப பாக்ஸ் ஆபீஸ் தகவல்படி 3வது நாளான சனிக்கிழமை மண்டாடி சுமார் 7.5 முதல் 9.25 கோடி வரை இந்திய நெட் வசூல் செய்திருக்கலாம் என்று வெவ்வேறு டிராகர்கள் தெரிவிக்கின்றன.
இதில் சாக்னிக் வெளியிட்ட தகவலின் படி 9.25 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அதாவது முதல் இரண்டு நாட்களுடன் ஒப்பிடும்போது சனிக்கிழமை வசூல் கணிசமாக உயர்ந்து இருக்கிறது. இந்தப் படத்தில் மிகப்பெரிய பலமே அதன் கதையும், கடலோர பின்னணியும். படகு போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட காட்சிகளும் தான். அதோடு சூரியின் நடிப்புக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
முதல் நாளிலே ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்தது. சர்தார் 2 அதிகமான தியேட்டர் ஷோக்கள் இருந்த நிலையில் தமிழ்நாட்டில் மண்டாடி அதிக வசூல் செய்தது. மண்டாடி 2,953 ஷோக்கலில் வெளியான நிலையில் சர்தார் 2 சுமார் 3,950 ஷோகளைப் பெற்று இருந்தது. அதிலும் முதல் நாளில் தமிழ்நாட்டில் மண்டாடி சுமார் 4 கோடி வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு பிறகு சனி, ஞாயிறு, விடுமுறை என்பதால் படத்துக்கு இன்னும் நல்ல கூட்டம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இப்போது மண்டாடி ஹிட்டு, பிளாக்பஸ்டர் என்று ரசிகர்கள் முடிவு செய்து விட்டார்கள். ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது. சூரி காமெடி நடிகர் மட்டும் இல்லை என்பது மண்டாடி மீண்டும் காட்டிக் கொண்டிருக்கிறது. விடுதலைக்கு பிறகு அவர் தேர்வு செய்யும் படங்கள் அதிகமாகவே கவனம் ஈர்க்கிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை வசூல் எப்படி இருக்கிறது? திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால் அன்றும் படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. சூரியின் படகை ரசிகர்கள் எந்த அளவிற்கு கரை சேர்க்க போகிறார்கள் என்பதை அடுத்த சில நாட்கள் தான் முடிவு செய்யும்.
