தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் தலைமைத்துவ பயிற்சி முகாம் சென்னை மாமல்லபுரத்தில் செவ்வாய்கிழமை தொடங்கியது. இதில், முதல் கட்டமாக 30 சட்டமன்ற உறுப்பினர்கள் 2 நாட்கள் பயிற்சி பெற உள்ளனர். முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் இந்த முகாமை தொடங்கி வைத்தார்.
சாம்பார் வெங்காயம், பீன்ஸ் செம்ம ஹாட்: எந்த காய்கறிகளை இன்று வாங்கலாம்?
முதல் நாள் நிகழ்வில் தொகுதிகளில் பொறுப்புடன் பணியாற்றுவது, அரசுத்துறைகளின் திட்டங்கள், மற்றும் பொது நிதியை மக்கள் பணியில் திறம்பட கையாள்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆனந்த், தலைமை என்பது வெறும் பதவி அல்லது அதிகாரத்தை பிரயோகிப்பது மட்டுமல்ல, அது மற்றவர்களை ஊக்குவிப்பதையும், அவர்களின் ஆற்றலை உணர உதவுவதையும் உள்ளடக்கிய ஒரு பொறுப்பு.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொது நலனையும் தொகுதி மேம்பாட்டையும் முன்னிறுத்தி, பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். மக்களுக்குச் சேவை செய்வதும் அவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதும் நமது முதன்மையான கடமைகளாகும். அரசு திட்டங்கள் பயனாளிகளை சென்றடைவதை எம்.எல்.ஏ-க்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.
பொது நலனை மையமாக கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களின் சட்டமன்ற மற்றும் தொகுதி அளவிலான பொறுப்புகளை மேலும் திறம்பட நிறைவேற்றுவதற்கான நடைமுறை திறன்களை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் எம். ரவிசங்கர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அரசு தலைமை கொறடா ஆர். சபரிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
