இந்திய பெண்கள் அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2-வது போட்டியில் முன்னாள் கேப்டனான ஹர்மன்ப்ரீத் கவுர் சதம் விளாசினார். அதேபோல் ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மாவும் சதம் அடித்தார்.
ஹர்மன்ப்ரீத் கவுர்
இந்த சதம் மூலம் ஹர்மன்ப்ரீத் கவுர் ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசையில் 10-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஜப்பானில் நடைபெற்ற ஆசிய போட்டிக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் கவுர் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் ஸ்மிரிதி மந்தனா கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.
ஸ்மிரிதி மந்தனா
இவர் முதல் போட்டியில் 38 ரன்கள் எடுத்த நிலையில், 2-வது போட்டியில் டக்அவுட் ஆனார். இதனால் முதல் இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். தென்ஆப்பிரிக்கா வீராங்கனை லாரா வால்வார்த் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
தீப்தி சர்மா
தீப்தி சர்மா 4 இடங்கள் முன்னேறி 23-வது இடத்தை பிடித்துள்ளார். ஆல்-ரவுண்டர் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பந்து வீச்சாளர் தரவரிசையில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
