ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘ஜெயிலர் 2′. இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (அக்.15) உலகம் முழுவதும் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, வித்யா பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதி, ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். மேலும் திரை பிரபலங்களும் படத்தை பாராட்டி வருகிறார்கள். அதேநேரத்தில், பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது ஜெயிலர் 2. இதுவரை உலகளவில் சுமார் ரூ. 628.05 கோடி வசூலை அள்ளி இருக்கிறது.இதன் மூலம், விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் ஈட்டிய மொத்த உலகளாவிய வசூல் சாதனையை அதிகாரப்பூர்வமாக முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளில் முதல் முறை
For the first time in 40 years, Superstar Rajinikanth joins fans to witness #Jailer2 on the big screen!😎🔥 #Jailer2 Industry Mega Blockbuster #Jailer2 Rampage in theatres worldwide @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss @IMAX
— Sun Pictures (@sunpictures) October 24, 2026
இந்த நிலையில், ‘ஜெயிலர் 2′ பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ரஜினிகாந்த் காரிலிருந்து இறங்கி, படத்தைக் காண ஐமேக்ஸ் திரையரங்கிற்கு செல்கிறார். அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இன்று ரசிகர்களுடன் ‘ஜெயிலர் 2’ படத்தை ரசிகர்களுடன் கண்டுகளித்தார். 40 ஆண்டுகளில் நடிகர் ரஜினிகாந்த் பொது வெளியில் திரைப்படத்தை பார்ப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
