சென்னை: ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, கடந்த 10ம் தேதி முதல் தமிழகம் முழுதும் சிறப்பு வாகன தணிக்கை தொடங்கப்பட்டது.
தொடர்ந்து, நேற்று அதிகாலை வரை, 2,379 ஆம்னி பஸ்களில் சோதனை செய்யப்பட்டன. பயணியரிடம் கட்டணம் குறித்து நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது கண்டறியப்பட்ட இடங்களில், அந்த தொகையை பயணியருக்கு திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த சோதனையில், 400 ஆம்னி பஸ்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. அவற்றுக்கு தணிக்கை அறிக்கை, இ- – சலான் வழங்கப்பட்டதுடன், உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப் பட்டது.
கூடுதல் கட்டணம் வசூல் உள்ளிட்ட விதி மீறல்களில் ஈடுபட்ட, 400 ஆம்னி பஸ்களுக்கு 16.93 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
